மட்டு. கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி.....

 மட்டு. கல்லடி டச்பார் இஞ்ஞாசியார் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு திருப்பலி.....

குருத்தோலை ஞாயிறு தினத்தினை முன்னிட்டு (02) தினம் உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட திருப்பலிகள் இடம்பெற்ற நிலையில்இ மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்திலும் குருத்தோலை ஞாயிறு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

ஆலய பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், திருப்பலியில் கல்லடி டச்பார் பங்குமக்கள் கலந்து கொண்டனர்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறித்து எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்போடு நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூரும் வகையில் அனைத்து கிறிஸ்தவ மக்களும்  திருப்பலி வழிபாடுகளில் கலந்துகொண்டனர்.

Comments