சமுர்த்தி அபிமான விற்பனை சந்தை கிரானில்.....

 சமுர்த்தி அபிமான விற்பனை சந்தை கிரானில்.....

சமுர்த்தி திணைக்களத்தால் வருடந்தோறும் நடாத்தப்படும் சமுர்த்தி அபிமான விற்பனையும் கண்சாட்சி சந்தையும் (09)ம் திகதி கிரான் பிரதேசத்தில்  கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் S.ராஜ்பாபு அவர்களின்  தலைமையில் நடைபெற்றது.

இவ்விற்பனை கண்காட்சியானது  கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவால்  கிரான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மற்றும் கோரளைப்பற்று தெற்கு சமுர்த்தி தலைமையக முகாமையாளர்,  சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள்  மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.









Comments