சமுர்த்தி அபிமானி உற்பத்தி மற்றும் விற்பனை கண்காட்சி.......

 சமுர்த்தி அபிமானி உற்பத்தி மற்றும் விற்பனை கண்காட்சி....... 

கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக பிரிவில் புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தலும் விற்பனையும் (17) அன்று பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது. 

சமுர்த்தி தலைமையக முகாமையாளர் M.I.A.அஸீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர்  V.தவராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்கள  பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் விசேட அதிதிகளாக மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின்  கணக்காளர் M.S.பஸீர், சமுர்த்தி வங்கி முகாமையாளர் B.M.சிஹான், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் N.விஜிதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். 

மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கடமைபுரியும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.















Comments