மட்டக்களப்பு ஜஸ் ரீல் கிட்ஸ் காடன் முன்பள்ளியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா ......

 மட்டக்களப்பு ஜஸ் ரீல் கிட்ஸ் காடன் முன்பள்ளியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா ......

மட்டக்களப்பு  ஜஸ் ரீல் கிட்ஸ் காடன் முன்பள்ளியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் முன்பள்ளியின் தாபகரும் அதிபருமான  பெனிற்றா நிலோஷினி ஸ்ரான்லி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. 

ஆரம்ப நிகழ்வாக பிள்ளைகளினால் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டனர். பின்னர் அதிதிகளினால் தேசியக் கொடி, பாடசாலைக் கொடி என்பன ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் பாடசாலைக் கீதமும் இசைக்கப்பட்டது. மேலும் பிள்ளைகளின் ஆற்றல்கள் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறுபட்ட மகிழ்ச்சிகரமான விளையாட்டுகளும் இடம்பெற்றன. மேலும் பெற்றோர்களுக்கான வினோத விளையாட்டுகளும் இடம்பெற்றன.

விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் சான்றிதழ்களும் வெற்றிக் கேடயங்களும் பரிசில்களும் வழங்கப்பட்டு அவர்கள் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு வலய முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் முத்துராஜா புவிராஜா அவர்களும் சட்டத்தரணி அருள்வாணி சுதர்ஷன் அவர்களும் பாலர் பாடசாலைக் கல்விப் பணியகத்தின் மட்டக்களப்பு வலய வெளிக்கள உத்தியோகத்தர் சாம்பசிவம் பரணிதரன் அவர்களும் D.S.ஸ்டான்லி அவர்களும் மற்றும்  காயத்திரி பிரசாத்,  ரேணுகா தயாளன், ஜெனனி ரொசான் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள். மேலும் பெற்றோர்களும் நலன் விரும்பிகளும் இவ்விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

மிகச் சிறப்பான முறையில் விழாவை பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன்  ஒழுங்கமைத்து செயற்படுத்திய முன்பள்ளி அதிபர் ஆசிரியர்களுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கதாகும்.







Comments