லாப்ஸ் எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு !

 லாப்ஸ் எரிவாயுவின் புதிய விலை அறிவிப்பு !

இன்று (4) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லாப்ஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு கொள்கலனின் விலை 1,290 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,990 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு கொள்கலனின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1,596 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லாப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 


Comments