மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில், கௌரவிப்பு நிகழ்வு...
2022 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாடு சுகாதாரம் மற்றும் வாழ்வாதார அபிவிருத்தி போன்ற சமூகப் பணிகளை முன்னெடுத்து வரும் தன்னார்வ தொண்டு அமைப்புகளான ட்ரீம் லைப் பவுண்டேஷன் மற்றும் கிரேசி லைப் லைன் ஆகியன இணைந்து, மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வை நடாத்தின.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த அமைப்புகளின் ஊடாக முன்னெடுத்து வரும் மாலை நேர இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி பயிலும் மாணவர்களில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களை கௌரவிக்கும் வகையில் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய மட்டத்தில் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டியில் சுமோ ரெஸ்லிங் போட்டியில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவி அக்ஷயா தவனேசன் வெற்றிக் கிண்ணம் மற்றும் பரிசீல் வழங்கிய கௌரவிக்கப்பட்டார்.
பணிப்பாளர் ரவி கிருஷ்னா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், அதிதிகளாக மட்டக்களப்பு ஜோசப் வாஸ் வித்யாலய அதிபர் சி.எல். சில்வெஸ்டர், மட்டக்களப்பு வலையிறவு பாடசாலை அதிபர் வினோதா கிருஷ்ணகுமார், புதூர் பிரதேச வர்த்தகர் ராஜ்குமார் மற்றும் கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், விளையாட்டு கழக உறுப்பினர்கள் ட்ரீம் லைப் பவுண்டேஷன் மற்றும் கிரேசி லைப் லைன் அமைப்பின் உத்தியோகத்தர்கள், எனப் பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment