நீர் கட்டணம் குறித்த விசேட அறிக்கை.....
இது தொடர்பில் குறித்த சபையால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
நுகர்வோர் மாதாந்தம் நுகரும் நீரின் அளவின் அடிப்படையில் நீர் கட்டணம் அறவிடப்படுவதுடன், குறித்த கட்டணத்தை 14 நாட்களுக்குள் செலுத்தினால் 1.5. வீத கழிவு வழங்கப்படுகின்றது.
நீர் கட்டணப் பட்டியல் கிடைக்கப்பெற்று 30 நாட்களுக்குள் கட்டணத்தை செலுத்த தவறின், மொத்த நிலுவையில் மேலதிகமாக 2.5. வீதம் அறிவிடப்படும்.
அரச நிறுவனங்களின் நீர் விநியோகத்துக்கான கட்டணம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதனை செலுத்துவதற்கு மேலதிகமாக 90 நாட்கள் வழங்கப்படும்.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையானதுஇ அதிக செலவீனத்தில் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான குடிநீரை தொடர்ச்சியாக நுகர்வோருக்கு வழங்கிவருகின்றது. இதற்கான கட்டணம் கூட நியாயமான அடிப்படையிலேயே அறிவிடப்படுகின்றது.
சேவைகளை தடையின்றி வழங்குவதற்கு நுகர்வோர் கட்டணத்தை செலுத்த வேண்டியது அத்தியாவசியமானது. அவ்வாறு தாமதமின்றி கட்டணத்தை செலுத்தினால் அது தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் முகாமைத்துவத்துக்கு சாதகமான காரணியாக அமையும்.
நுகர்வோருக்கு முன்னறிவித்தல் வழங்கிய பின்னர்இ அதிகாரமளிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே நீர் துண்டிப்பு இடம்பெறுகின்றது.
Comments
Post a Comment