மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு.....

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் அரிசி பொதிகள் வழங்கி வைப்பு.....

மியான்மார் அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கைக்கு வழங்கப்பட்ட அரிசிப் பொதியானது உணவு ஆணையாளர் திணைக்களத்தினூடாக மிகவும் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு பிரதேச செயலகங்கள்  ஊடாக  வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் இவற்றை கையளிக்கும் நிகழ்வானது 11.04.2023 அன்று பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் வர்த்தக அமைச்சின் இராஜாங்க அமைச்சர் கெளரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்து கொண்டு  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பொருளாதார நெருக்கடியால் மிகவும் பாதிப்பிற்குள்ளான 650 குடும்பங்களுக்கு தலா 20KG  அரிசி பொதிகள் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்,  நிருவாக உத்தியோகத்தர், கிராம நிருவாக உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






Comments