மட்டு.வாகரை கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி......

 மட்டு.வாகரை கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி......

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாகரை கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின்  அதிபர் ஜீ.;ஜீவனேஸ்வரன் தலைமையில் இல்ல விளையாட்டு போட்டி நடைபெற்றது.

இவ் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு நிகழ்வுடன் வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வாக தரம் 12 உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் நன்மை கருதி கலைப்பிரிவு மட்டு.வாகரை கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

47 வருடங்களின் பின்னர் அதிபர், பாடசாலை சமூகம் முன்னாள் கல்குடா வலய பிரதி கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி மற்றும் இராஜங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர்கள் இணைந்து எடுத்த முயற்சியினால் இவ் கல்வி நேய பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக கல்குடா கல்வி வலய பிரதி கல்வி முகாமைத்துவ பணிப்பாளர் க.ஜெயவதனன், வாகரை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஈ.எல்.பண்டார, உடற்கல்வி உதவிப்பணிப்பாளர் க.சுபாஸ்கரன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

விசேட அதிதிகளாக கோறளைப்பற்று வடக்கு கோட்டம் வாகரை அதிபர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.அதிதிகள் மலர் மாலை அணிவித்து மாணவர்களினால் பான்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.

வைபவ ரீதியாக கலைப்பிரிவு வகுப்பறை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கொடியேற்றம் தேசிய கீதம் இசைக்கப்பட்டு மாணவர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சத்தியப் பிரமாணம் நடைபெற்றது.

முல்லை, மருதம் என இரண்டு இல்லத்தின் மாணவர் பிரிவினருக்கிடையே போட்டி நிகழ்சிகள் நடைபெற்றன.மருதம் இல்லம் முதல் இடத்தினை பெற்றது. நிகழ்வின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டி சாண்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

மாகாண மட்டத்தில் உதைபந்தாட்டப் போட்டியில் 1 ஆம் இடத்தினைப்பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவான மாணவர்கள் பாராட்டப்பட்டு சான்றிதழ்களும் வெற்றிச் சின்னங்களும்வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உரையாற்றும் போது எதிர்கால உலகம் சவால் மிக்கதாக உள்ளது. எனவே மாணவ செல்வங்களே கல்வி கற்பதில் அதிக கவனம் செலுத்துங்கள்.அதற்கான உதவியினை நான் வழங்க தயாராகவுள்ளேன் என்றார்.

வாகரை கட்டுமுறிவுக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது கல்குடா கல்வி வலயத்திலே அதிகஸ்டப் பிரதேசத்தில் அமைந்துள்ள அதிகூடிய தொலை துரப் பாடசாலையாக காணப்படுகிறது.

Comments