சரிகமப புகழ் ரமணியம்மாள் காலமானார் !
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சங்கீத போட்டியான ஹசரிகமப' மூலமாக மக்களுக்கு அறிமுகமானவர் ரமணியம்மாள்.
அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றார். வீடுகளில் பாத்திரம் தேய்க்கும் போது பாடுவதை வழக்கமாகக் கொண்டவர். இவரது பாடலைக் கேட்ட வீட்டு உரிமையாளர் ஹசரிகமப' நிகழ்ச்சி குறித்துக் கூறவும் அதில் போட்டியாளராகக் கலந்து கொண்டார்.
திறமைக்கு வயது தடை இல்லை என உணர்த்தியவர். 67 வயதான ரமணியம்மாள் இன்று இயற்கை எய்திருக்கிறார். சமீபத்தில் வெளியான ஹபொம்மை நாயகி' திரைப்பட்டத்திலும் ரமணியம்மாள் பாடியிருந்தார். அவருடைய திடீர் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Comments
Post a Comment