நான் மட்டக்களப்பில் அடுத்த தலைமுறையை கிரிக்கெட் விளையாட்டில் வளர்ப்பதில் ஆர்வம் உடையவனாகவும் உத்வேகமும் கொண்ட பயிற்சியாளராக இருப்பேன்- மலிங்கா சுரப்புலிகே
நான் மட்டக்களப்பில் அடுத்த தலைமுறையை கிரிக்கெட் விளையாட்டில் வளர்ப்பதில் ஆர்வம் உடையவனாகவும் உத்வேகமும் கொண்ட பயிற்சியாளராக இருப்பேன்- மலிங்கா சுரப்புலிகே
நான் மட்டக்களப்பில் அடுத்த தலைமுறையை கிரிக்கெட் விளையாட்டில் வளர்ப்பதில் ஆர்வம் உடையவனாகவும் உத்வேகமும் கொண்ட பயிற்சியாளராக இருப்பேன் இதற்காக எனது அறிவைப் பயன்படுத்த நான் ஆர்வமாக உள்ளேன் என பிரபல கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் மலிங்கா சுரப்புலிகே தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தால் கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து (01) இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பிலேயே மலிங்கா சுப்பிலியே தன் அனுபவங்களை பகிரும் போது இதை தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்
சிறார் மற்றும் இளைஞர் கிரிக்கெட் விளையாட்டில் சிறந்த முறையில் ஈடுபட அவர்களுக்கு அவர்களின் அனுபவம் மற்றும் திறன்களே ஊக்குவிக்கிறது. நான் சிறார்கள் இளைஞர்களை கிரிக்கெட் விளையாட்டில் மேலும் வளப்படுத்தும் நோக்குடன் பணிபுரிய ஆசைப்பட்டே இங்கு வந்துள்ளேன். இவ்வீரர்களின் இயல்பான விடாமுயற்சி, உறுதிப்பாடு, ஒழுக்கம், அர்ப்பணிப்பு, பணி நெறிமுறைகள், அணுகுமுறை, தலைமைத்துவ திறன், மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துதல், போட்டியில் மட்டுமல்ல, பொதுவாக வாழ்க்கையிலும். அவர்களுக்கு பயிற்சியாளராக இருப்பது, என் கடமையாகும்.
விளையாட்டு வீரர்கள் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளவும், கட்டமைக்கவும் கற்றுக்கொள்வதற்கும் தங்கள் இலக்குகளை அடைவதற்கு தாங்களே தங்களை நம்புவதும் அவசியமாகும். இதுவே என் பயிற்சியின் முழு நோக்கமும் ஆகும். அவர்களின் விளையாட்டு மற்றும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது அவர்களை ஊக்குவிப்பது எனது கடமையாகும். மற்றும் அவர்களின் குணாதிசயத்தை கண்டறிந்து பயிற்சி அளிப்பதே சிறந்த வழி என்று நான் நம்புகிறேன் என குறிப்பிட்டார்.
அவரைப்பற்றி அறிந்த கொள்வோம் - பெற்ற பட்டங்கள்:
2010ல் இங்கிலாந்து கிரிக்கெட் சங்கத்தில் (England Cricket Board) (ECB Level - 2 Coach) தரம்-2 க்கான பயிற்சியாளராக பதிவிட்டுக் கொண்டவர்.2015- 2016ம் ஆண்டுகளில் இங்கிலாந்தின் போல்டன் பல்கலைகழகத்தில் விளையாட்டு அறிவியல் மற்றும் பயிற்சியின் (BSc) கௌரவ பட்டத்தை பெற்றவர்.
2010, 2016ல் சிறார் பயிற்சி பாதுகாப்பு தரம் '1' நிலையை வெற்றிகரமாக நிறைவு செய்தவர்.
தொழில்முறை அனுபவம்: இலங்கையில்
கொழும்பு நாலந்தா கல்லூரியில் மூத்த தலைமை பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.கண்டி தர்மராஜா கல்லூரியின் சீனியர், ஜூனியர், அகாடமியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டவர்.
2015 SLC மகளிர் மாகாண மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரை வெல்வதற்கு காரணமாகிய பயிற்றுவிப்பாளர்.
2015இல் கொழும்பு தெற்கு SLC மாவட்ட இளைஞர் மேம்பாட்டு பயிற்சியாளராக செயற்பட்டது
2014/15 ஆம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் போட்டிகளில் சென் பீட்டர்ஸ் கல்லூரி வெற்றி பெற்ற போது உதவிப் பயிற்சியாளராகவும் பயிற்சியாளராகவும் கடமையாற்றியது.
2013/14 இல் தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் தடகள கழகத்தின் உதவிப் பயிற்சியாளராகவும் பயிற்சியாளராகவும் கடமையாற்றியது.
2003-2013 ஆண்டு வரை இலங்கை சம்பத் வங்கியில் நிறைவேற்று வங்கியாளர் மற்றும் உதவி மேலாளராக கடமையாற்றியமை
வெளிநாடுகளில்
(2018-2020). ஆஸ்திரேலியா மெல்போர்ன், வாரகுல் மாவட்ட கிரிக்கெட் தொடரில் ஹலோரா கிரிக்கெட் கழகத்தின் வீரராகவும் பயிற்சியாளராக பணியாற்றியமை. அத்துடன் 2018/19 மற்றும் 2019/20. ஹலோரா கிரிக்கெட் கழகத்திற்கான வாரகுல் மாவட்ட T/20 தொடரில் வெற்றி பெற்ற போது வீரராகவும், பயிற்சியாளராக பணியாற்றியமை மற்றும் 2018/19 மற்றும் 2019/20. ஹலோரா கிரிக்கெட் கழகத்திற்கான வாரகுல் மாவட்ட 50 ஓவர்கள் கொண்ட தொடரில் வெற்றி பெற்ற போது வீரராகவும் பயிற்றுவிப்பாளரபாகவும் செயற்பட்டமை.
2011 ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தில் Eppleton கிரிக்கெட் கழகத்தின் சிறார்களுக்கான பயிற்றுவிப்பாளராக செயற்பட்டமை.
2010 இங்கிலாந்தில் போல்டன் கிரிக்கெட் கழகத்தின் இளையோர் பயிற்சியாளராக செயற்பட்டமை
2008 மற்றும் 2009 இங்கிலாந்தின் ஹெட்டன் லியோன்ஸ் கிரிக்கெட் கழகத்தின் இளையோர் பயிற்சியாளராக செயற்பட்டமை.
சாதனைகள் ஒரு வீரராக தன்னை இனங்காட்டிய தருனம்...
2003 - 2013 வரையிலான காலப்பகுதியில் சம்பத் வங்கியின் 'A' பிரிவு கிரிக்கெட் அணியின் அங்கத்தவராக 12 தடவைகள் வெற்றி பெறச்செய்தவர்.
2010 ஆம் ஆண்டில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டியில் வெற்றி பெற்ற போது அங்கத்தவராக வெற்றிக்கு வித்திட்டர்.
2002 ஆம் ஆண்டில் அகில இலங்கை பாடசாலைகளின் சிறந்த பந்து வீச்சாளர்
2002 ஆம் ஆண்டில் இலங்கை 19 வயதுக்குட்பட்ட பாடசாலை அணியை பிரதிநிதித்துவப்படுத்தியவர்.
2000 - 2007 வரை இலங்கை வேகப்பந்து வீச்சு அகாடமியின் உறுப்பினர்
ஐக்கிய இராச்சியத்தில் ஏழு வருட கிரிக்கெட் தொடர் அனுபவம் கொண்டவர். அதில்
இரண்டு தொடர்களின் சாம்பியன், மூன்று ''40 ஓவர்'' சாம்பியன், மூன்று ''T/20'' சாம்பியன், 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரின் சிறந்த பந்துவீச்சு சராசரி, 4 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரின் அதிக விக்கெட்டுகள்.
2010சீசனில் அதிக விக்கெட்டுகள். ''62 விக்கெட்'' , 2017 அதிகபட்ச ஓட்டமாக ஆட்மிழக்காமல் 140 ஓட்டங்கள், 2009ல் இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுகள் 7/31 கைப்பற்றி சாதனை.
மட்டக்களப்பு கிரிக்கெட் வளர்ச்சி புலம்பெயர்ந்தோர் கைகளில் தான் உள்ளது என்று அன்றே நாங்கள் எழுதி விட்டோம். அதன் மற்றுமொரு வேலைத்திட்டமாகவே மட்டக்களப்பில் யாரும் செய்து கூட பார்க்க முடியாத வேலைத்திட்டத்தை கோட்டைமுனை விளையாட்டு கழகம் மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கிராமம் செய்துள்ளது, செய்து வருகின்றது, செய்யப்போகின்றது இதில் எதுவித ஐயப்பாடும் தேவையில்லை .
Comments
Post a Comment