BBK Stallioins அணியின் பயிற்சியாளராக சமிந்த வாஸ்....
Mercantile Cricket Association Super Premier League - 2023 போட்டியில் BBK Stallions என்ற முன்னாள் LPL அணியானது அறிமுகம் ஆகியுள்ளது என Jaffna Stallions கிரிக்கெட் அக்கடமியின் தலைவர் Dr.ராஜிவ் நிர்மலசிங்கம் தெரிவித்துள்ளார்.
LPL உரிமையை இழந்த பின்னர் Jaffna Stallions இன் உரிமையாளர்கள் ஸ்டாலியன்ஸ் கிரிக்கட் அக்கடமியின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கில் கிரிக்கெட் மற்றும் திறமையான வீரர்களை ஊக்குவிப்பதன் மூலம் தேசிய அமைப்பை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர்.
யாழ். ஸ்டாலியன்ஸின் ஸ்தாபகப் பங்காளியும் கணக்காளர் நிறுவனமான BBK Partnershipப்பின் மூத்த பங்குதாரரான ஆனந்தன் ஆர்னால்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு விளையாட்டு மற்றும் கணக்கியல் தகுதி போன்றவற்றில் தொழில் முறை வாழ்க்கை பாதையை வழங்குவதே தமது நோக்கமாகும் என கூறினார்.
வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களிலும் அடிமட்ட அளவில் இருந்து கிரிக்கெட்டை Stallions உருவாக்கி வருகிறது. 2018ஆம் ஆண்டு யாழ்ப்பாண புனித ஜோன்ஸ் கல்லூரியின் அணி தலைவரும் தற்போது கொழும்பு பல்கலைக்கழக கிரிக்கெட் அணியின் அணித்தலைவருமான வசந்தன் ஜதுசன், BBK Stallions அணிக்காக விளையாட அழைக்கப்பட்ட போது, அந்த வாய்ப்பை தனது இரு கைகளாலும் பயன்படுத்திக்கொண்டதாக கூறினார்.
BBK Stallions சங்கீத் குரே தலைமையில் வடக்கு கிழக்கு வீரர்கள் விளையாடவுள்ளனர். அதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் BBK Stallions அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்று உள்ளார்.
Comments
Post a Comment