50 வருட கொண்டாட்டத்தை ஊடக சந்திப்பில் அறிவித்து தெறிக்க விட்ட கோட்டைமுனை விளையாட்டு கழகம்....
மட்டக்களப்பில் உள்ள பிரபலமான விளையாட்டு கழகங்களில் ஒன்றான மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகம் தம் 50வது ஆண்டு நிறைவை 2022ம் ஆண்டு கடந்து வந்த போதிலும், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரமாக தங்கள் 50வது வருட நிகழ்வை 2023ல் மிக சிறப்பாக நடாத்த முடிவெடுத்து (01) ஆகிய இன்று ஒரு ஊடக சந்திப்பை கழக தலைவர் P. சடாற்சரராஜா அவர்களின் தலைமையில் கல்லடி உள்ள தனியார் விடுதியில் நடாத்தி இருந்தது.
இந்நிகழ்வில் தம் 50வது வருட நிகழ்வை முன்னிட்டு பல நிகழ்ச்சி திட்டங்களை 2023ம் ஆண்டு முழுவதும் நடாத்துவதற்கு திட்டமிட்டு அறிவிக்கப்பட்டதுடன், ஒரு தனி கழகம் தமக்கென ஒரு தனித்துவமான பயிற்சியாளரையும் அறிமுகம் செய்து வைத்தது.
இதன் போது 2023ம் ஆண்டு முழுவதும் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.
1. நடைபவணி
2.சீனியர் அணியினருக்கான கழகத்தில் இருந்த உயிர் நீத்த பிலீகஸ் ஞாபகார்த்த தொடர்.
3.யூனியர் அணியினருக்கான கழகத்தில் இருந்து உயிர் நீத்த பிரகாஸ் ஞாபகார்த்த தொடர்.
4.கோட்டைமுனை பிரிமியர் லீக் புதுப்பொலிவுடன்.
5.யாழ்ப்பாண கழகத்துடனான கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் BIG Match
6. வருடாந்த ஒன்று கூடல் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதன் பின் மிக முக்கியமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தடவையாக இங்கிலாந்து கிரிக்கெட் சங்கத்தின் தரம் '02' நிறைவு செய்த பயிற்றுவிப்பாளர் மலிந்த சுரபுலிக்கே கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். எதிர்காலத்தில் மட்டக்களப்பில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த வேண்டும் என்கின்ற தூர நோக்கு சிந்தனையில் இவரின் நியமனம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதனைத்தொடர்ந்து கோட்டைமுனை விளையாட்டு கழகத்திற்கான KSC காளை பாடல் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே.சடாற்சரராஜா அவர்களாலும் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் தலைவர் T.சஜிதராஜ் அவர்களாலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புது பொலிவுடன் ஆங்கில மொழியில் இணையதளம் கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் முதல் அங்கத்தவரான ஏ.சிவநாதன் அவர்களால் அறிமுகம் செய்த வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 50வது வருட ஞாபகார்த்தமாக T.சேட் மற்றும் தொப்பிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் ஆயுள் கால அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது.
எமது பிரதேசத்தில் உள்ள இளைஞர்களை சிறந்த கிரிக்கெட் வீரர்களாக மாற்றுவதற்கும், அவர்களை தேசிய கிரிக்கெட் நீரோட்டத்தில் இணைப்பதற்கும் கோட்டைமுனை விளையாட்டு கழகம் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. இது மாத்திரமன்றி வட கிழக்கு மாகாணத்தில் இருக்கும் ஒரே ஒரு புற்தரையிலான கிரிக்கட் மைதானம் கோட்டைமுனை விளையாட்டுக் கிராமத்தில் அமைந்துள்ளது என்பதும் இங்கு குறித்துக்காட்டப்பட வேண்டிய விடயமாகும். எனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டை வளர்த்தெடுப்பதற்கு தன்னாலான சகல முயற்சிகளையும் கோட்டைமுனை விளையாட்டு கழகம் மற்றும் கோட்டைமுனை விளையாட்டு கழகம் செய்து வருகின்றது.
இந் நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் பணிப்பாளர்களான எஸ்.ரஞ்சன், எஸ்.காசிப்பிள்ளை, ஏ.சிவநாதன், கழக செயலாளர் பா. ஜெயதாசன், கழக பொருளாளர் கே.தயாசிங்கம், கழக உபதலைவர் எஸ்.தங்கராஜா மற்றும் கழக உறுப்பினர்கள் EPP வீரர்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment