3.2 மில்லியன் நலன்புரி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்தது......

 3.2 மில்லியன் நலன்புரி விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்தது......

நலத்திட்ட உதவித் தொகையை பெறுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 3.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிறைவடைந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு தகுதியானவர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலகப் பிரிவுகளிலிருந்து பெறப்பட்ட 3.7 மில்லியன் விண்ணப்பங்கள் தொடர்பான நலன்புரி கொடுப்பனவுகளுக்கான தகுதி சரிபார்ப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் ஜூன் மாதம் முதல் புதிய திட்டத்தின் மூலம் கொடுப்பனவை வழங்குவதற்கு நலன்புரி நன்மைகள் சபை நம்பிக்கை கொண்டுள்ளது.

Comments