மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதிகள் கணக்கெடுப்பு 2024 இற்கான வரைபடங்கள் கையளிப்பு!!
மட்டகளப்பு மாவட்டத்தின் மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதிகள் கணக்கெடுப்பு 2024 இற்கான கிராம சேவகர் பிரிவு ரீதியான வரைபடங்களை கையளிக்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் காலமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளின் பெரிய அளவிலான அச்சிடப்பட்ட வரைபடங்கள் அப்பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்கள வெளிக்கள உத்தியோகத்தர்களூடாக பிரதேச செயலாளர்களிடம் கையளிப்பதற்கான நிகழ்வு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிராம சேவகர் பிரிவு ரீதியாக வரைந்த படங்களை துணையாக கொண்டு 2024 இல் மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் தொகை மற்றும் வீட்டு வசதிகள் தொடர்பான கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment