கன்னன்குடாவில் இடம்பெற்ற வருடாந்த சிறுவர் மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி - 2023
மட்டக்களப்பு மண்முனை மேற்கு மண்டபத்தடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த சிறுவர் மெய்வல்லுநர் திறனாய்வுப் போட்டி அண்மையில் பாடசாலையின் அதிபர் க.சிவகுமார் தலைமையில் பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான யோ.ஜெயச்சந்திரன் (நிர்வாகம்), செ.மகேந்திரகுமார் (நிர்வாகம்), ஆகியோரும், சிறப்பு அதிதிகளாக திரு.யோ.சாள்ஸ் சஜீவன்(பிரதிக் கல்விப் பணிப்பாளர் திட்டமிடல்), ந.குகதாசன்(பிரதிக் கல்விப் பணிப்பாளர் கல்வி அபிவிருத்தி), மண்முனை மேற்கு கோட்ட அதிபர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், விளையாட்டுக் கழகங்கள்,
மலைமகள் கலாமன்றம், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், முதியோர் மற்றும் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
Comments
Post a Comment