ஆரையூர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி 2023!!
ஆரையூர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி கழக தலைவர் பாலேந்திரன் பானுபாரதி தலைமையில் ஆரையூர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் அதிதிகள் ஆரையம்பதி ராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலய மாணவிகளின் பேண்ட் வாத்திய குழுவின் இசை முழக்கத்துடன் வரவேற்கப்பட்டதுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி கலந்து கொண்டு சிறப்பித்ததுடன், தேசிய கொடியினை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பழமையான விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான ஆரையூர் விளையாட்டு கழகத்தின் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கழக வீரர்கள் ஆறு அணிகளாக பிரிந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.
இந் நிகழ்வில் ஶ்ரீகந்தசுவாமி ஆலய பிரதமகுரு. சோதிநாதக்குருக்கள், ஆரையம்பதி அருள்மிகு ஶ்ரீ கந்தசுவாமி ஶ்ரீகண்ணகி ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயங்களின் பரிபாலன சபை உறுப்பினர்கள், ஆரையம்பதி ராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலய உப அதிபர், கிராம சேவை உத்தியோகத்தர், பிரதேச விழையாட்டு உத்தியோகத்தர் போன்றோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
Comments
Post a Comment