07. இலங்கை அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தமிழர் ஸ்ரீதரன் ஜெகநாதன்: இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழர்கள்...........
07. இலங்கை அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் களமிறங்கிய தமிழர் ஸ்ரீதரன் ஜெகநாதன்: இலங்கை கிரிக்கெட் அணியில் விளையாடிய தமிழர்கள்...........
பின்னர் 20.03.1983ல் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அப்போட்டியில் கூட இவரால் விக்கெட்டுக்களை கைப்பற்ற முடியவில்லை, பின்னர் இவர் 1987ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இணைந்து நடாத்திய உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார். அவர் இலங்கையில் அணியில் இணைத்து அழைத்துச் செல்லப்பட்டார்.
29 முதல் தர போட்டிகளில் விளையாடிய இவர் 437 ஒட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளதுடன், அதிக படியாக 75 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார். பந்து வீச்சில் 49 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ள இவர் தன் சிறந்த பெறுபேறாக 34 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றி உள்ளதுடன் 14 பிடிகளையும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இதன் பின் இவரது கிரிக்கெட் விளையாட்டு முடிவுக்கு வந்தது, பின்னர் மலேசிய தேசிய கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றார். இதன் பின் தனது 44வது வயதில் 1996ம் ஆண்டு மே மாதம் 14ம் திகதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய கிரிக்கெட் அணியில் முதல் முதலில் விளையாடிய தமிழரான ஸ்ரீதரன் ஜெகநாதன் அவர்களை பாராட்டுகின்றோம்.
Comments
Post a Comment