நிமலன் சௌந்தரநாயகம் T/10 18ம் திகதி ஆரம்பம்-Battieye.blogspot.com

 நிமலன் சௌந்தரநாயகம் T/10 18ம் திகதி ஆரம்பம்-Battieye.blogspot.com

தற்போது மட்டக்களப்பில் கடின பந்து கிரிக்கெட் களைகட்டத் தொடங்கியுள்ளது. கடந்த மாதம்  T/10 போட்டி  மட்டக்களப்பில் VMD நிறுவனத்தால் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது முறக்கொட்டஞ்சேனை இளஞ்சுடர் விளையாட்டு கழகம் முதல் தடவையாக மறைந்த நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் ஞாபகர்த்தமாகT/10 சுற்றுத் தொடரை 18ம் திகதி ஆரம்பமாகி நடாத்தவுள்ளது.

அணிக்கு 11 பேர் கொண்ட 10 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட விலகல் முறையிலான இப்போட்டியில் மட்டக்களப்பில் உள்ள 25 கடின பந்து கிரிக்கெட் கழகங்கள் பதிவு செய்துள்ளன. 

இப்போட்டிகளுக்கான போட்டி அட்டவணை இடும் பணி 16ம் திகதி முறக்கொட்டாஞ்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றவுள்ள 25 கழகங்களின் அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தங்கள் போட்டிக்கான அட்டவணையை தெரிவு செய்து கொண்டனர்.

 இப்போட்டித் தொடரில் மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகம் சாருகன் தலைமையில் மோதவுள்ளதாக கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் கிரிக்கெட் முகாமையாளர் C.யசோக்குமார் தெரிவித்துள்ளார். கோட்டைமுனை விளையாட்டு கழகம் தம் முதல் போட்டியை எதிர்வரும் 18ம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னைவேளாங்கன்னி அணியுடன் மோதவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உண்மையில் பாராட்டத்தக்க விடயம் என்னவென்றால் கடினபந்து கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்க முறக்கொட்டஞ்சேனை இளஞ்சுடர் விளையாட்டு கழகம் எடுத்திருக்கும் இம்முயற்சி சிறப்பானதாகும். இப்போட்டிகள் மிகச்சிறப்பாக வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.







Comments