மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவிற்கு LIFT நிறுவனத்தினால் இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-Battieye.blogspot.com

 மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவிற்கு LIFT நிறுவனத்தினால் இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கிவைப்பு-Battieye.blogspot.com

மட்டக்களப்பில் பல்வேறு மனிதாபிமானப் பணிகளை முன்னெடுத்துவரும் LIFT தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினால் மாவட்ட ஊடகப் பிரிவின் சேவையை பலப்படுத்தும் வகையில் சுமார் ஐந்து இலட்சம் ரூபாய்கள் பெறுமதியில் புகைப்படக் கருவி உட்பட சில இலத்திரனியல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.
LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன் மற்றும் HELVETAS நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ரமேஷ் ஆகியோரினால் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவிடம் வழங்கி வைக்கப்பட்டது.
HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் ஊடாக இளைஞர்கள் மத்தியில் ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதற்குமான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதன் ஒரு கட்டமாக மாவட்ட ஊடகப்பிரிவின் பாவனைக்கென இப் புகைப்படக்கருவியும், உபகரணங்களும் வழங்கப்பட்டன.
இதன் போது மாவட்ட ஊடகப்பிரிவு உத்தியோகத்தர்களான உதயகுமார் உதயகாந்த், ஜீ.மயூரன், எம்.நஸ்ரியா ஆகியோரும், LIFT நிறுவன உத்தியோகத்தர்களான வீ.கண்ணன், விதுஷா, சாம்பசிவம் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

Comments