HELVETAS நிறுவனத்தின் அனுசரணையில் Lift Ngo நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு:Battieye.blogspot.com

 HELVETAS நிறுவனத்தின் அனுசரணையில் Lift Ngo நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வு:Battieye.blogspot.com

HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் Lift Ngo மனிதாபிமானத் தொண்டு நிறுவனத்தினால் பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வுகள் இடம்பெற்றுள்ளது.

பேத்தாழை விபுலாநந்தா கல்லூரி, வாழைச்சேனை அந்-நூர் மகா வித்யாலயம் தேசியபாடசாலை, மட்/ஓட்டமாவடி மத்திய மகா வித்தியாலயம், முறக்கொட்டாஞ்சேனை ராமகிருஷ்ணமிசன் வித்தியாலயம் மற்றும் மட்டக்களப்பு களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயம் ஆகியவற்றில் "கருத்து வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும்" எனும் தொனிப்பொருளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வுகள் நடாத்தப்பட்டுள்ளது.
இதற்கான வளவாளர்களாக ஊடகவியலாளர்களான அ.ஜனார்த்தன், அ.சதுர்ஜனா, சு.விநோதினி, ந.துஜோகாந்த், பா.டயசிங்கம், பே.சபேஸ், மு.த.மு.பாரிஸ், சே.ம.மு.முஷித் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான விழிப்புணர்வை வழங்கியிருந்தனர்.
(7)ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட செயலமர்வானது இரண்டு நாட்களைக் கொண்டதாக இருந்தது. இச்செயலமர்வின் கண்காணிப்பாளர்களாக LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜானு முரளிதரன், மற்றும் உத்தியோகத்தர்களான சுதன், கண்ணன், விதுஷா, விஜி மற்றும் கிறிஸ்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தச் செயலமர்வில் 150 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்ததுடன் அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இவ் விழிப்புணர்வு செயலமர்வை நடாத்துவதற்காக மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி LIFT நிறுவனத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டிருந்தமையும், இத்திட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவு மற்றும் மனிதநேய தகவல் குறிப்புகள் மதகு (மதகு) நிறுவனம் ஆகியவை பங்காளர்களாக செயற்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.







Comments