களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு பொதுக்கூட்டம்-Battieye.blogspot.com

 களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச சமுதாய அடிப்படை அமைப்பு பொதுக்கூட்டம்-Battieye.blogspot.com

மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி)  பிரதேச செயலகப் பிரிவின் பிரதேச சமுதாய அடிப்படை அமைப்புக்கான பொதுக்கூட்டம் உபதலைவர் தயாநிதி சிவராசா அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது. 

மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற இக் கூட்டத்தில், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் புவனேஸ்வரி ஜீவகுமார், சமுர்த்தி  முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார், மாவட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு முகாமையாளர் கே.பகீரதன், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் சோ.தமிழ்வாணி, மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ஆனந்தமோகன், கல்லாறு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ரவிந்திரன், சமூக அபிவிருத்தி உதவியாளர், சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்பு தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் 2022ம் நிர்வாக சபையின்  பதவிக்காலம் முடிவுக்கு வந்ததால் இவ்நிர்வாக  சபை கலைக்கப்பட்டதோடு, உத்தியோகபூர்வமாக 2023ம் ஆண்டுக்கான புதிய நிறைவேற்றுக்குழு சபையால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.








Comments