மட்டு.களுவாஞ்சிக்குடியில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுப்பு-Battieye.blogspot.com
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கான கருப்பை கழுத்துப் புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி மற்றும் ஏற்புவலி, தொண்டைக் கரப்பான் நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன.
தடுப்பூசி ஏற்றும் செயல் திட்டம் சுகாதார வைத்திய அதிகாரி Dr A.உதயசூரியவின் வழிகாட்டலில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் S.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் தரம்-6 இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கு கருப்பை கழுத்து புற்றுநோய் தடுப்பூசி ஏற்றப்பட்டது. அத்துடன் ஏ.ரி.டி தடுப்பூசியும் ஏற்றப்பட்டன. பொதுச்சுகாதாரபரிசோதகர் கஜானணன் உட்பட குடும்பநல உத்தியோகத்தர்கள் தடுப்பூசியேற்றும் செயற்றிட்டத்தில் இணைந்திருந்தனர்.
Comments
Post a Comment