மட்டு.திராய்மடுவில் சுவிஸ் உதயம் அமைப்பின் கட்டட திறப்பு விழா....
கிழக்கு மாகாணத்தில் மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டினை மேற்கொண்டு சுனாமி அனர்த்ததின் பின்னரான காலம் தொடக்கம் பல்வேறு சமூக பணியை முன்னெடுத்துவரும் சுவிஸ் உதயம் அமைப்பின் தலைமைக் காரியாலய கட்டடத் திறப்பு விழா மட்டக்களப்பு திராய்மடு பனிச்சையடியில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில் தமது சேவையினை விஸ்தரிக்கும் வகையில் சுமார் இரண்டரை கோடி ரூபா செலவில் குறித்த கட்டடத்தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண தலைவர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக சுவிஸ் உதயம் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்ஸன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் மற்றும் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்க செயலாளர் ராஜன் அம்பலவாணர் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
.
Comments
Post a Comment