இலுக்கு ஈரளக்குளம் கிராமத்தில் வாழ்வாதார உதவி ஈழப்பதீஸ்வரர் ஆலயத்தால்-Battieye.blogspot.com

 இலுக்கு ஈரளக்குளம் கிராமத்தில் வாழ்வாதார உதவி ஈழப்பதீஸ்வரர் ஆலயத்தால்-Battieye.blogspot.com

ஈரளக்குளம் இலுக்கு கிராமத்தில் வசிக்கும் பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகளை லன்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலய சமூகப்பணியூடாக 14ம் திகதி அன்று வழங்கி வைக்கப்பட்டது.

ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது தங்கள் வாழ்வாதார தொழிக்கு தேவைப்படும் துவிச்சக்கர வண்டிகள் கொள்வணவு செய்து 10 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதற்கான நிதியுதவியை லன்டன் ஈழப்பதீஸ்வரர் ஆலய சமூகப்பணியகம் வழங்கி இருந்தது. இந்நிகழ்வானது ஈரளக்குளம் அபிவிருத்தி உத்தியோகத்தர் கணகசபை வெல்வராசா மேற்பார்வையில் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.





Comments