மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு-Battieye.blogspot.com
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு நிகழ்வானது பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் கல்லடி பேச்சியம்மன் ஆலய வளாகத்தில் (14) அன்று 'அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்' எனும் தொனிப்பொருளில் இந்நிகழ்வுஇடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சினி முகுந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அத்துடன் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவன பணிப்பாளர் கலாநிதி.புளோரன்ஸ் பாரதி கென்னடி அவர்கள் கௌரவ அதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் காமினி ஜூட் இன்பராஜா, கல்லடி ஆலய முகாமையாளர் நமசிவாயம் ஹரிதாஸ், பேச்சியம்மன் ஆலய தலைவர் பொன்னையா குணசீலன் ஆகியோரும் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரால் திறன் பட இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment