அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு-Battieye.blogspot.com
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சமூக பயிற்சி திறன் வேலைத்திட்டத்திற்கான ஒரு மாத கால பயிற்சி நெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் (22) அன்று மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
சமூக பயிற்சி திறன் வேலைத்திட்டத்திற்கான பயிற்சிநெறி zoom தொழில் நுட்பத்தின் ஊடாக ஒரு மாத கால பயிற்சி முடித்துக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அலவலகத்தில் வைத்து சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. இதன் போது 49 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment