முன்மாதிரிகையாக செயற்படும் கோரளைப்பற்று மத்தி சமுர்த்தி பிரிவு பயனாளிகள மற்றும் உத்தியோகத்தர்கள்.....

 முன்மாதிரிகையாக செயற்படும் கோரளைப்பற்று மத்தி சமுர்த்தி பிரிவு பயனாளிகள மற்றும் உத்தியோகத்தர்கள்.....

2023ம் ஆண்டு உணவு பாதுகாப்பு திட்டத்தை ஊக்கப்படுத்தும் நோக்குடன் வீட்டுத்தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஊடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படத்தப்பட்டு வருகின்றன.

 இதன் அடிப்படையில் தாமாக முன் வந்து உணவு பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தி வீட்டுத்தோட்டத்தினை ஊக்கப்படுத்த் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட நாற்றுமேடையாளர்களும், வீட்டுத்தோட்ட பயிர்செய்கைக்கு தெரிவான பயனாளிகளும் இணைந்து 1350 வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு தலா 420 ரூபாய் பெறுமதியான கத்தரி, மியகாய், தக்காளி, கறிமிளகாய் போன்ற நாற்று கன்றுகளை வழங்கி ஒரு முன்மாதிரியான செயற்திட்டத்தை செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த நாற்றுக்களின் மொத்தப் பெறுமதியான 561000 ரூபாவை வீட்டுத்தோட்ட பயனாளிகளே பகிர்ந்து கொண்டது பாராட்டத்தக்க விடயமாகும்.

இவ்விடயத்தினை கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் S.H.முஸமில் அவர்களின் வழிகாட்டலில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.A.M.பஸீர் அவர்களின் ஆலோசனைக்கு அமைய கருத்திட்ட முகாமையாளர்  சரீப் அவர்களின் மேற்பார்வை அன்மையில் பயனாளிகளுக்கு நாற்று கண்றுகள் வழங்கி வைக்கப்பட்டது.  

கடந்த காலங்களில் சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக இவ்நாற்றுக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இருந்த போதிலும் தற்போது மக்களே இவ்வேலைத்திட்டத்தின் பெறுமதியை உணர்ந்து செயற்பட்டுள்ளனர் எனவே  இவ்விடயம்  ஒரு பாராட்டத்தக்க விடயமாகும். 






Comments