மட்டக்களப்பில் மதங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் ஓவியக் கண்காட்சி......
மொழியருவி சகவாழ்வு சங்கத்தின் ஏற்பாட்டில் மதங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் ஓவியக் கண்காட்சி மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.
சிறுவர்களைக் கொண்டு ஓவியமாக்கப்பட்ட சித்திரங்களை காட்சிப்படுத்தும் வகையில் இடம் பெற்ற கண்காட்சி நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் கலந்து கொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார்.
எக்டெட் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மொழியருவி சகவாழ்வு நிறுவனத்தினால் கண்காட்சி நடாத்தப்பட்டது. சித்திரங்களை சித்தரித்த சிறார்களுக்கான பரிசல்களும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன, இனங்களுக்கிடையே சகவாழ்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு வீதி நாடகம் இளைஞர் யுவதிகளினால் காட்சிப்படுத்தப்பட்டது.
நிகழ்வில் அதிதிகளாக எக்டெட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆர் கஜேந்திரன், பொருளாதார அபிவிருத்தி எஸ்.பிரதீபன், மண்மனை வடக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர், கொக்குவில் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment