வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் தொடர்பான மாணவர்களுக்கான செயலமர்வு-Battieye.blogspot.com
வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் தொடர்பான மாணவர்களுக்கான செயலமர்வு-Battieye.blogspot.com
வெளிப்பாட்டு உரிமையும் நெறிமுறைகளுடன் கூடிய ஊடகப்பாவனையும் தொடர்பான விழிப்புணர்வை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக "ஊடக தர்மத்தை வலுப்படுத்துவதன் ஊடாக வன்முறை தீவிரவாதத்தை தடுத்தல்" எனும் தொனிப் பொருளில் LIFT மனிதாபிமான தொண்டு நிறுவனத்தினரால் நடத்தப்படும் செயலமர்வின் மற்றுமொரு கட்டம் ஏறாவூர் மற்றும் வந்தாறுமூலை ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டது.
இச் செயலமர்வில் 99 மாணவர்கள் பயிற்சிகளை பெற்றனர் அத்துடன் செயலமர்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டது.
HELVETAS நிறுவனத்தின் நிதி அனுசரணையில் ஏறாவூர் மக்கான் மாக்கார் வித்தியாலயம், ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை, தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபை வந்தாறுமூலை ஆகிய மூன்று நிலையங்களில் இந்த இரண்டு நாள் கொண்ட செயலமர்வுகள் இடம்பெறுகின்றன.
மாணவர்களுக்கான பயிற்சிகள் வழங்குவதற்காக ஊடகவியலாளர்களான ருக்சிக்கா மயூரன், க.ருத்திரன், ஜெயச்சந்திரிகா, மொகமட் சாதிக் சஜித் அஹமட், அ.சதுர்ஜனா, மு.முஷித், ந.துஜோகாந்த் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வுக்கான கண்காணிப்பு பணியினை செய்வதற்காக LIFT நிறுவனத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் ஜானு முரளிதரன் மற்றும் உத்தியோகத்தர்களான சுதன், விதுஷா, கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment