மட்டு.கருவப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி

 மட்டு.கருவப்பங்கேணி விபுலாநந்தா கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி

 
மட்டக்களப்பு கருவப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியின், வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு விளையாட்டு போட்டி கல்லூரி அதிபர் கணேசமூர்த்தி தலைமையில் விளையாட்டு போட்டி நடைபெற்றது .

நிகழ்வில் பிரதம அதிதியாக, மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்து கொண்டார்.

போட்டி நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களின் அணி நடை, திறனாய்வு விளையாட்டுக்கள் இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் சிறந்த விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு பரிசில்கள், வெற்றி கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இல்ல விளையாட்டு போட்டியில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவி கல்வி பணிப்பாளர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Comments