அர்ஜுன ரணதுங்கவை பதவி விலகுமாறு அறிவிப்பு!
தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக இராஜினாமா செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவுக்கு எழுத்துமூல அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் (29) வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய விளையாட்டு சபை 29 பிற்பகல் 2.00 மணிக்கு கூடவிருந்த போதிலும், தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினர்கள் எவரும் Zoom தொழில்நுட்பத்தினூடாக பங்குபற்றவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
அது குறித்து வியப்படைய வேண்டாம் எனவும், இனி தேசிய விளையாட்டு சபையின் தலைவராக உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் சுதத் சந்திரசேகர அர்ஜுன ரணதுங்கவிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment