உள நல சம்மேளனத்திற்கான கலந்துரையாடல் ..........

 உள நல சம்மேளனத்திற்கான கலந்துரையாடல் ..........

 உள நல சம்மேளனத்திற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ( 23) இடம் பெற்றது.

இந் நிகழ்வினை மாவட்ட உளவள ஆற்றுப்படுத்தும் உத்தியோகத்தர், கே.மதிவண்ணன், மாவட்ட உள சமூக உத்தியோகத்தர் எ.பிரபாகர் ஆகியோரினால் இணைப்பாக்கம் செய்தனர்.
இந் நிகழ்வின் போது அரசாங்க அதிபரினால் பிரதேச ரீதியாக மன உளைச்சல் காரணமாக பல நபர்கள் இன்னல்களுக்கு முகம்கொடுப்பதை காணக்கூடியதாக இருப்பதனால் பிரதேச செயலாளர்களிடம் மாதம் ஒருமுறை உளநல மேம்பாடு தொடர்பாக கூட்டம் ஒன்றினை செயற்படுத்துமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.
இள வயது சந்ததியினர் மத்தியில் உளநலத்தினை மேம்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றாக சேர்ந்து செயற்படவேண்டும் என அதிதிகளினால் முன்வைக்கப்பட்டது.
இதன் போது பங்கு பற்றுனர்களினால் தாம் எதிர் நோக்கிய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் தொடர்பான விளக்கம் வழங்கியதுடன் கள விஜயங்களின் போது அதிகாரிகள் சந்தித்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் தொடர்பில் இக் கலந்து துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
மாவட்ட தேசிய பாதுகாப்பு சிறுவர் அதிகார சபை மற்றும் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு , மாவட்ட உளவள ஆலோசகர், மாவட்ட போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோர்களிடம் இருந்து கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, உளநல வைத்திய நிபுணர் டான் சௌந்தராஜா, உளநல வைத்தியர் வி. சிந்துஜன்,பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், வைத்திய அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், உதவி பொலிஸ்மா அதிபர், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






Comments