மட்டு. புனித மிக்கேல் கல்லூரியில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை வரவேற்கும் விழா
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில், 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் விழா கல்லூரியின் அதிபர் ஜோன் பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்துகொண்டார். ஆரம்ப நிகழ்வாக கல்லூரி மாணவர்களினால் பாண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு அதிதிகள் கல்லூரி பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பாடசாலையின் தரம் இரண்டு மாணவர்களினால் தரம் ஒன்றுக்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து மாணவர்களின் கலாசார நிகழ்வுகளுடன் விழா சிறப்பாக நடைபெற்றது
கல்வி திணைக்கள அதிகாரிகள், ஆசிரியர் ஆலோசகர்கள், பெற்றோர்கள் எனப் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்
.
Comments
Post a Comment