மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச மட்ட புதிய நிர்வாகம் தெரிவு.....

 மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி பிரதேச மட்ட புதிய நிர்வாகம் தெரிவு.....

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக செயற்படும் பிரதேச மட்ட அமைப்புக்கள் தற்போது 2023ம் ஆண்டுக்காக புதுப்பிக்கப்பட்டு புதிய நிருவாக சபைத் தெரிவு செய்யப்பட்டு வருகின்றது. 

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின்  மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கான பிரதேச மட்ட அமைப்புக்களின் 2023ம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவுக்கான கூட்டம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி டினேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன், உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விடய முகாமையாளர் K.பகீரதன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர், வங்கி முகாமையளர், அபிவிருத்தி உத்தியோகத்தர் (CBO), சமூக அபிவிருத்தி உதவியாளர், பிரிவுக்கான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அமைப்புக்களின் தலைவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.





Comments