காய்கறிகளின் விலைகளில் மேலும் வீழ்ச்சி-Battieye.blogspot.com

 காய்கறிகளின் விலைகளில் மேலும் வீழ்ச்சி-Battieye.blogspot.com

யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அதிகளவான மரக்கறிகள் வருகை காரணமாக மரக்கறிகளின் விலைகள் குறைந்துள்ளன.

அதன்படி நேற்று (13) யாழ்ப்பாணத்தில் இருந்து அறுபதாயிரம் கிலோகிராம் மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார நிலையத்திற்கு கிடைத்துள்ளன .

தம்புள்ளை விசேட பொருளாதார நிலையத்தின் மரக்கறி இருப்புக்கள் நேற்று (13) பின்வருமாறு பதிவாகியுள்ளன.

இதன்படி, ஒரு கிலோ பீன்ஸ் மொத்த விற்பனை விலை 150 ரூபாவாகவும், லீக்ஸ் 150 ரூபாவாகவும், கேரட் 100 ரூபாவாகவும், தக்காளி 130 ரூபாவாகவும், முள்ளங்கி 40 ரூபாவாகவும், முட்டைக்கோஸ் 70 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு (யாழ்ப்பாணம்) 140 ரூபாவாகவும், உருளைக்கிழங்கு (நுவரெலியா) 200 ரூபாவாகவும் இருந்தது.

கப்பெட்டிபொல பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ மரக்கறிகளின் மொத்த விலை பின்வருமாறு இருந்தது.

பீன்ஸ் 150-180 ரூபாய்,  பீட்ரூட் ரூ.120-140, முட்டைக்கோஸ் ரூ.30-35, கறி மிளகாய் ரூ 250-300, ஒரு கேரட் 55-65 ரூபாய், வெண்டைக்காய் ரூ.140-145 ஆகவும், முள்ளங்கி ரூ.30-35 ஆகவும் இருந்தது.

Comments