வடமராட்சி கிழக்கில் குழந்தை உயிரிழப்பு: தாயார் பாலூட்ட மறுத்ததே காரணம்- யாழ். அரச அதிபர்

 வடமராட்சி கிழக்கில் குழந்தை உயிரிழப்பு: தாயார் பாலூட்ட மறுத்ததே காரணம்- யாழ். அரச அதிபர்

மனநோயாளியான தாயார் குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததே வடமராட்சி கிழக்கில் குழந்தை உயிரிழக்கக் காரணம் என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு – குடத்தனையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆண் குழந்தை ஒன்று போஷாக்கு குறைபாட்டால் உயிரிழந்தது. இது தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபர் (21) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கையில், "தாயார் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைக்கு பாலூட்ட மறுத்துள்ளார், அவர் மாதாந்தம் கிளினிக்குக்குச் செல்லவும் மறுத்து வந்துள்ளார், குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர். குழந்தை உணவூட்டப்படாமலேயே உயிரிழந்தது" என்றார்.

Comments