"பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நாடகம்-Battieye.blogspot.com

 "பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நாடகம்-Battieye.blogspot.com

"பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்போம் சுற்றுச்சூழலை பாதுகாப்போம்" என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகமொன்று (20) திகதி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் மத்தியில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் மக்களுக்கும் சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை எடுத்துக்காட்டும் வகையிலான விழிப்புணர்வு வீதி நாடகம் ஒன்றினை மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ நிறுவனத்தினர் சி.பி.எம் நிறுவனத்தின நிதி அனுசரணையுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கொக்குவில் கிராமத்தில் அரங்கேற்றியிருந்தனர்.
இந்நிகழ்விற்கு வை.எம்.சீ.ஏ நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் செ.பிறின்ஸ் அலெக்ஸ் தலைமை தாங்கி நடாத்திய நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் ராஜ்மோகன், பிரதேச செயலக சுற்றுச்சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரசாந்தி, மாற்றத்திறனாளி அமைப்பினர், வை.எம்.சீ.ஏ உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இவ்வீதி நாடகத்தினை கதிரவன் நாடக குழுவினருடன் மாற்றுத்திறனாளிகள் இணைந்து வழங்கியிருந்ததுடன் இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டன.
இவ்வீதி நாடகம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.









Comments