ஓட்டமாவடி கோட்ட மட்ட விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வு-Battieye.blogspot.com

 ஓட்டமாவடி கோட்ட மட்ட விளையாட்டு போட்டியின் ஆரம்ப நிகழ்வு-Battieye.blogspot.com

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள் பங்குபற்றும் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை அமீர் அலி பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளருமான வீ.ரீ.அஜ்மீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார, ஓட்டமாவடி வர்த்தக சங்க தலைவர் ஏ.சீ.எம்.நியாஸ், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் இணைப்புச் செயலாளர் கலாநிதி முஸ்ஸம்மில் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டு நிகழ்வுகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வின்போது, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரவின் சேவையை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
குறித்த விளையாட்டுப் போட்டியில் பிரதேச பாடசாலைகளின் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.








Comments