மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறார்களின் உளவளத்தினை மேம்படுத்துவதற்காக பயிற்றுனர்களுக்கான மூன்று நாள் பயிற்சி பாசறை!!

 மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறார்களின் உளவளத்தினை மேம்படுத்துவதற்காக பயிற்றுனர்களுக்கான மூன்று நாள் பயிற்சி பாசறை!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டிளம் பருவ சிறார்களின் உளவளத்தினை மேம்படுத்துவதற்காக பயிற்றுனர்களுக்கான மூன்று நாள் பயிற்சி பாசறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் (24) திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா கலந்து கொண்டதுடன் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தலைமையில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகம், பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் மற்றும் வலய கல்வி பணிமனை இணைந்து மாவட்டத்தில் உள்ள கட்டிளம் பருவ சிறார்களின் உளப்பாங்கு நிலையினை விருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்த வகையில் இளம் பராய மாணவர்களை கண்காணித்து அவர்களை சிறந்த ஆளுமையுடைய நபர்களாக மாற்றுவது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களது பொறுப்பாகும் என அதிகாரிகளினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள கட்டிளம் பருவ சிறார்களை உளநல மேம்பாட்டை வலுப்படுத்தி ஆளுமை மிக்க சிறந்த பிரஜைகளை உருவாக்குவதற்கான மூன்று வருட இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பிள்ளைகளையும் வளப்படுத்தும் பொறுப்பு இன்றைய பயிலுனர்களின் பாரிய பொறுப்பாக காணப்படுகின்றது. நிண்ட கால மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக இவ் பயிலுனர்களினால் கட்டிளம் பருவத்தினர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் மேற்கொள்ளப்படவுள்ளது .
மனோகரி தொகுப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட பயிற்றுனர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதுடன் கட்டிளம் பருவ சிறார்களின் நடத்தையினை அவதானித்து அவர்களின் மாற்றத்தை உணர்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி சிறந்த பிரஜையாக மாற்ற வேண்டியது அவர்களின் கடமையாக உள்ளது. இவ் பயிற்சி பாசறையினை நடாத்துவதற்கு யாழ் மருத்துவ பீட பழைய மாணவர் அமைப்பின் (JMFOA ) நிதி அனுசரணையில் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், உளநல வைத்திய நிபுணர் எம்.கணேஷன், மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் சுஜாதா குளேந்திரகுமார்,உளநல வைத்தியர் நிபுணர் டான் சகுந்திரராஜா, வைத்தியர்கள், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், துரைசார் நிபுணர்கள், உளவள ஆலோசகர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.






Comments