பால் மா விலை அதிரடியாக குறைப்பு!
இறக்குமதி பால் மாவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை சுமார் 200 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், 400 கிராம் பால் மா பொதியின் விலை 80 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த விலை குறைப்பை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் அமுல்ப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்
Comments
Post a Comment