கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த பிரபல சமூக செயற்பாட்டாளர்!
அக்கரைப்பற்று சுவாட் (SWOAD) அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற இணையத்தின் (NGOs Consortium) தவிசாளரும், பிரபல சமூக செயற்பாட்டாளருமான வடிவேல் பரமசிங்கம் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருக்கோவில் தம்பட்டையைச் சேர்ந்த வடிவேல் பரமசிங்கம் கொழும்பு செல்லும் வழியில் செவனப்பிட்டியில் நள்ளிரவு (29 ) இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார்.
வடிவேல் பரமசிங்கம், சமூகங்களுக்கிடையிலான இன நல்லுறவைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றியவர், நல்லுள்ளம் கொண்டவர் ஒரு நண்பனாய், உடன் பிறவா சகோதரனாய், பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்களில் அமைப்புக்களில் சமூக பற்றுள்ள மக்கள் தொண்டனாய் செயற்பட்டவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, மென் சுபாவம் நிறைந்த சிறந்த பண்பாளர், சமூகசிந்தனாவாதி. அமைதியாக அனைவருக்கும் மதிப்பளித்து பேசுபகின்ற நல்ல சுபாவம் கொண்டவர் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் அவரது உயிரிழப்பு இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Comments
Post a Comment