காத்தான்குடியில் உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு-Battieye.blogspot.com

காத்தான்குடியில் உலருணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு-Battieye.blogspot.com

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி தெற்கு 167/C கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி சமுதாய அடிப்படையில் அமைப்புக்களினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி பல நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயஸ்ரீதர், காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Comments