'எமது உதயம்' விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒலிப்பந்து கிரிக்கெட் போட்டி-Battieye.blogspot.com
'எமது உதயம்' விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒலிப்பந்து கிரிக்கெட் போட்டி-Battieye.blogspot.com
'எமது உதயம்' விழிப்புலனற்றோர் சங்கத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு கிழக்கு மாகாண பிரிலியண்ட் மற்றும் கொழும்பு இரத்மலான பார்வைற்றோர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒலிப்பந்து கிரிக்கெட் போட்டி மட்டக்களப்பு சிவாநந்தா விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி 15 ஓவர்கள் நிறைவில் 7 இலக்குகளை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 14.2 ஓவர்களில் 95 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. ஆட்டநாயகனாக கொழும்பு அணி தலைவர் திமுத்த பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் முகாமையாளர் வணக்கத்துக்குரிய சுவாமி ஜு நீலமாதவானந்தர் அவர்கள் கலந்து கொண்டதுடன், பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பொதுச்சபை ஆணைக்குழு செயலாளர், M.கோபாலரெத்தினம் அவர்களும் சிறப்பு விருந்தினராக மண்முணை வடக்கு பிரதேச செயலாளர், V.வாசுதேவன் அவர்களும் கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் S.அருள்மொழி அவர்களும். உதயம் விழப்புலனற்றோர் சங்கத்தின் ஆலோசகரும் கிழக்கு மாகாண அணி பயிற்சிவிற்பாளர் T. விநாயகமூர்த்தி, சங்கத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
Comments
Post a Comment