மட்டக்களப்பு சிறைச்சாலையில் மாபெரும் குருதிக்கொடை நிகழ்வு:Battieye.blogspot.com
மட்டக்களப்பு சிறைச்சாலையின் ஏற்பாட்டில் மாபெரும் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் (06) திகதி மட்டக்களப்பு சிறைச்சாலை வளாகத்தில் இடம் பெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில்
''உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்'' எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு சிறைச்சாலை, கல்முனை சிறை கூடம் மற்றும் கைதிகளின் நலன்புரி
சங்கத்தினால் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந் நிகழ்வின் போது பிரதம சிறைச்சாலை அதிகாரி டபிள்யு எ.எஸ்.அரவிந்த, சிறைச்சாலை அதிகாரிகள், பொது மக்கள், கைதிகளின் உறவினர்கள் என் பலரும் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment