மகளிர் தினத்தில் போதைப்பொருள் பாவனை பற்றிய செயலமர்வு-Battieye.blogspot.com
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் பாவனையை தடுப்பது பற்றிய செலமர்வு ஒன்று மாவடிச்சேனை கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L.M.ஐயூப்கான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த செயலமர்வின் போதைப்பொருள் பாவனையை தடுப்பத தொடர்பான செயலமர்வின் வளவாளராக இஸ்லாமிய கலாச்சார உத்தியோகத்தர் A.L.பீர் முஹமட் அவர்களால் நெறியாள்கை செய்து நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.A.M.பஸீர் அவர்களும் சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் A.L.M.சரீப் அவர்களும், பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர் C.M.A.இஸ்மயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் பின் ஒரு சிரமதானம் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கால் நடாத்தப்பட்டது.
Comments
Post a Comment