மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முதியோர் கொடுப்பனவு வழங்கி வைப்பு...

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் முதியோர் கொடுப்பனவு வழங்கி வைப்பு...

தற்கால பொருளாதார  நெருக்கடியில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட  பகுதியில் மிகவும் பாதிப்பிற்குள்ளான காத்திருப்பு பட்டியலில் உள்ள  சிரேஸ்ட பிரஜைகளுக்கு CAMID, YMCA, PPPC  ஆகிய நிறுவனங்கள் இணைந்து CBM அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் முதல் கட்டமாக 15 சிரேஸ்ட பிரஜைகளுக்கான ரூபா 5000 பெறுமதியான காசுக் கட்டளை பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்களில்  பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இவ்வேலைத்திட்டத்திற்கு  281 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர், அதில் இருந்தே இந்த முதல் கட்ட கொடுப்பணவு வழங்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர்.ஷியாஹுல் ஹக், CAMID நிறுவன பணிப்பாளர் காண்டீபன், சமூக சேவை உத்தியோகத்தர்  ப.ராஜ்மோகன், கிராம நிர்வாக உத்தியோகத்தர் கே.ராஜன், மாவட்ட முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்  ப.விஸ்வகோகிலன் மற்றும் பிரதேச செயலக முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.








Comments