கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் சமுர்த்தி பிரிவால் மகளிர் தினம்:Battieye.blogspot.com
2023ம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர்தின நிகழ்வு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினால் சமுர்த்தி மாதிரி கிராமமான பிறைந் துறைச்சேனை 206C கிராமத்தில் சமுர்த்தி முகாமைத்துவப பணிப்பாளர் எம்.எல்.ஏ. மஜீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ரமீசா அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்வில் மாவட்ட செயலக சமுர்த்தி சமுக அபிவிருத்தி முகாமையாளர் புவிதரன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி திட்ட முகாமையாளர் ஏ.எல்.சரீப், மகளிர் உத்தியோகத்தர் அரூசியா, சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் பிரிவு உத்தியோகத்தர் ஏ.சி.சாதிக்கீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் சமுர்த்தி நிவாரனம் பெறும் பயனாளிகளுக்கான லொத்தர் சீட்டிலுப்பில் வெற்றி பெற்றவர்களின் வீடுகள் திருத்தியமைக்கப்பட்டு இரண்டு வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டதுடன், மேலும் இரு பயனாளிகளுக்கு காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. மற்றும் இந்நிகழ்வில் மாவடிச்சேன சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கால் சேகரிக்கப்பட்ட பாடசாலை கற்றல் உபகரணங்களில் ஒரு தொகுதி உதவி பிரதேச செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.
Comments
Post a Comment