ஆயித்தியமலையில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞன் உழவு இயந்திர விபத்தில் சிக்கி மரணம்-Battieye.blogspot.com

 ஆயித்தியமலையில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞன் உழவு இயந்திர விபத்தில் சிக்கி மரணம்-Battieye.blogspot.com

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தின், ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் உழவு இயந்திரம் சேற்றில் புதையுண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தார்.

மகிழவட்டவான் கிராமத்தைச் சேர்ந்த தர்மராசா சதீஸ்வரராஜா (வயது 34) எனும் இளைஞனே இவ்வாறு பலியானவராவார்.
சனிக்கிழமை (11) தனது உழவு இயந்திரத்தில் ஆயித்தியமலை பகுதியில் சிறுபோக விதைப்புக்காக வயல் நிலம் பண்படுத்திக் கொண்டிருக்கும்போது சேற்றில் உழவு இயந்திரம் புதையுண்டதால் அதனை வெளியே எடுக்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட விபத்தில் இவ் இளைஞன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
இவர் திருமணமாகி 5 மாதங்களாக நெல்லூர் எனும் கிராமத்தில் வாழ்ந்துவருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments