காத்தான்குடியில் அரச மானிய அரிசி விநியோகம்-Battieye.blogspot.com
அரசாங்கத்தால் நெல் கொள்வனவு மற்றும் கையிருப்பில் உள்ள 2022/2023 காலப் பகுதியில் பெரும்போக அறுவடையினால் கிடைத்த அரிசியை அகற்றல் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் அரச மானிய அரிசி விநியோகம் அண்மையில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.
இதன் முதற் கட்டமாக கடந்த (15) திகதி காத்தான்குடி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் (167A,167B,167C), ஒரு பிரிவிற்கு 500 அரிசிப் பொதிகள், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்து கிலோ வீதம் வழங்கப்பட்டன.
இதற்காக பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பொருளாதார சிக்கல் காரணமாக பாதிக்கப்பட்ட, குறைந்த வருமானம் பெறும் 8366 குடும்பங்களுக்கு, இவ் அரிசிப் பொதிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜரூப், சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார, சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment